Thursday , May 24 2018
Home / District-News / எஸ்.என். ஆர். அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லுாரிகளில் சேர “ஆன்–லைன் கவுன்சிலிங்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ்.என். ஆர். அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லுாரிகளில் சேர “ஆன்–லைன் கவுன்சிலிங்” விழிப்புணர்வு நிகழ்ச்சி




கோவை எஸ்.என். ஆர். அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லுாரிகளில் சேர
“ஆன்–லைன் கவுன்சிலிங்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்துார்,
ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கான ‘ஆன்–லைன்’ விண்ணப்ப முறை, தேர்வு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உள்ள கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் ஆர். விஜயக்குமார் வரவேற்றார்.

விழாவில், கவுரவ விருந்தினராக பங்கேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி திரு. வி.ஜெயராமன் பேசுகையில், கல்வித்துறையில் மட்டுமின்றி, மருத்துவ துறையிலும் சிறப்பான பணியாற்றி வருகிறது ராமகிருஷ்ணா அறக்கட்டளை. தரமான கல்வியை, ஏழை எளிய மாணவர்களும் பெற வேண்டும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள், தொழில்கல்வி கற்று, முன்னேற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனங்கள். பல்வேறு கல்வி நிறுவனங்களை சிறப்பா க செயல்படுத்தி வரும் ராமகிருஷ்ணா குழுமம், மாணவர்களுக்காக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்திருப்பது பாராட்டுக்குரியது, என்றார்.

இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்,பி வேலுமணி பேசுகையில், ‘‘ பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையிலான பல்வேறு கல்வித்திட்டங்களை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு விரைவில் தன்னிறைவான கல்வியை பெற்று, அகில இந்திய அளவில் சிறப்பான மாநிலமாக மாறும்,’’ என்றார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் பேசுகையில், ‘‘ தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை சிபிஎஸ்இக்கும் மேலாக உயர்த்த பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு சாலை விதிகள் சொல்லித்தரப்படும். மனிநேயமும் பாடத்தில் சேர்க்கப்படும். பிள்ளைகள், பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் வகையில் பாசப்பிணைப்புகள் பற்றியும், நீதி போதனையும் கற்றுத்தரப்படும். அனைத்து மேலாண்மை கல்வியையும் பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் பாடத்திட்டங்கள் அமையும்,’’ என்றார்.

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், ’’ மாணவர்கள், டிவி சீரியல்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், போன், கம்ப்யூட்டர்களில் நேரத்தை வீணடிக்காமல், தினமும் செய்தித் தாள்களை படிப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். பல தகவல்கள், பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் தான் வெளியாகின்றன. அவற்றை படித்து அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.

விழா ஏற்பாடுகளை, எஸ்என்ஆர் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா, தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார், முனைவர் எபினேசர் ஜெயக்குமார், இயக்குனர் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை பங்கேற்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி
[email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *