Tuesday , May 22 2018
Home / District-News / தமிழ்நாடு கொங்கு குல மருத்துவர் சங்கத்தினர் காவிரி மேலாண்மை அமைக்க கோரி ஆர்பாட்டம்

தமிழ்நாடு கொங்கு குல மருத்துவர் சங்கத்தினர் காவிரி மேலாண்மை அமைக்க கோரி ஆர்பாட்டம்


கோவையில் தமிழ்நாடு கொங்கு குல மருத்துவர் சங்கத்தினர் காவிரி மேலாண்மை அமைக்க கோரி ஆர்பாட்டம

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கொங்கு குல மருத்துவர் சமுதாய சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை அமைக்க கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கொங்கு குல மருத்துவர் சங்க தலைவர் யு.பி. ராமசாமி மற்றும் கோவை மாவட்ட செயலாளர் எம். செந்தில்குமார் தலைமையில் மாநகர செயலாளர் ஏ. கனகராஜ், மாநில பொறுப்பாளர் வா.அம்சராஜ், சம்பத் முன்னிலை வகித்தனர்.

இதில் கமலி, கலாமணி, விஜயலட்சுமி, ஜோதி மணி, லிங்கம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷ்ங்களை எழுப்பினார்.

இதையடுத்து பத்திரிகையாளரிடம் யு.பி ரங்கசாமி கூறிகையில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மத்திய பிஜேபி அரச ஆட்சி வந்ததிலிருந்து தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பிறகும் காவரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்காமல் மோடி அரசு தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளது.

ஜனநாயகத்திற்கும் தேச ஒற்றுமைக்கும் மிக பெரிய கேடு விளைவிக்கும் என்றும் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்து வாய்மூடி மௌனியாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடத்துவதாக அவர் கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி
[email protected]

About Admin

Check Also

ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *