Monday , May 21 2018
Home / Hospitals / வி.ஜி.எம்.மருத்துவமனையில் புதிய வெளி நோயாளி பிரிவு துவக்கம்.

வி.ஜி.எம்.மருத்துவமனையில் புதிய வெளி நோயாளி பிரிவு துவக்கம்.


கோவை வி.ஜி.எம்.மருத்துவமனையில் புதிய வெளி நோயாளி பிரிவு துவக்கம்

கோவை திருச்சி ரோட்டி சிங்காநல்லூரில் உள்ள வி.ஜி.எம்.மருத்துவமனையில் புதிய வெளி நோயாளிகள் பிரிவு துவக்க விழாவிற்கு அமைச்சர் எஸ். பி.வேலுமணி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏ.சி.மகேந்திரன் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவிற்கு மருத்துவமனை டாக்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வி.ஜி.எம். மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கான புதிய பிரிவினை அமைச்சர் எஸ். பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

வி. ஜி.எம. மருத்துவமனை தலைவர் டாக்டர். மோகன் பிரசாத் பேசியதாவது கோவையில் உள்ள வி.ஜி.எம்.மருத்துவமனையில் ஜிரண மண்டல உறுப்பு பிரச்சனை, சாக்கரை நோய், உடல்பருமன், இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு தரமான சிகிச்சையை பெறும் வகையில் நவீன கருவிகள் 24 மணி நேர பரிசோதனை கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மேலும் ஜெர்மன் தொழில்நுட்ப பிரான் கருவிகள் மூலம் தரக்கட்டுப்பாட்டுடன். கூடிய டயாலிசிஸ், ப்ளாள்மா, பெரிஸிஸ் பெறலாம்.

இப்போது மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பயன் பெறும் வகையில் புதிய சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது என்றார்

கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

Doctors from Fortis Malar and Therukoothu Artists come together to fight Substance Abuse

Chennai, April 2018: Doctors of Fortis Malar Hospital and Therukoothu artists came together to create awareness about evils of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *