Thursday , May 24 2018
Home / District-News / உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மரக்கன்று பேரணி.

உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மரக்கன்று பேரணி.


திருச்சி தண்ணீர் அமைப்பின் சார்பில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் மரக்கன்றுகளை வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் முழக்கத்துடன் விழிப்புணர்வு மரக்கன்று பேரணி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பிளாஸ்டிக் எனும் எமன் விழிப்புணர்வு கையேடு வீடுகள் தோறும் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் பையை தவிர்ப்போம் துணிப் பையை பயன்படுத்துவோம் எனும் முழக்கத்துடன் வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பசுமையை வளர்ப்போம் புவியைக் காப்போம் எனும் நோக்கில் பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம், இணைச் செயலாளர்கள் கி.சதீஷ்குமார், தளபதி தாமஸ், ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.கே.ராஜா, செயல் ராஜேஷ் , சிலம்பம் கார்த்திக் மாணவர் கள் சந்தியா, மகேந்திரன், பூபேஷ் , ரமணா மற்றும் கலைக்காவிரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள் அகரன் அபி , கண்ணன் , கண்ண தாசன், யதூசன், கிருஷ்ணாபுரம் பாரதிஇளைஞர் மன்றம் மணி குழுவினர் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு வீடுகள் தோறும் விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பண்படங்கள், காபி,டீ, வாங்குவதைத் தவிர்ப்போம். சாம்பார் முதல் சால்னா வரை வாங்குவதற்கு பாத்திரம் கொண்டு போவோம். வெட்கப்படாமல் துணிப்பைகளை புழக்கத்திற்குக் கொண்டு வருவோம். இன்றிலிருந்தாவது நமக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்துவோம்.

நம்மிலிருந்து மாற்றத்தைத் தொடங்குவோமே! .புவியைக் காத்திட உறுதி மொழி எடுத்தனர் .

செய்தியாளர்
ருக்மணி [email protected]

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *