Thursday , May 24 2018
Home / District-News / மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்க ஆர்ப்பாட்டம்.

மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்க ஆர்ப்பாட்டம்.


சென்னை சிட்லபாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் சீருடைமுறையை அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் உள்ள சுடிதார் முறை சீருடையை பயன்படுத்த கோரியும்…தனியார் பள்ளிகள் கவர்ச்சி மற்றும் வியாபார நோக்கில் குட்டை பாவாடை மேல்ச்சட்டை அணியும் சீருடைமுறையை மாற்றக்கோரியும் காவல் துறை அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்டது…குறிப்பாக இதே பகுதியில் பழமை வாய்ந்த NSN பள்ளி கூட தற்போது 6 ஆம் வகுப்பிலிருந்து 9 ஆம் வகுப்பு வரை PINO FORE என்று சொல்லக்கூடிய முழங்கால் வரை பாவாடை மற்றும் மேல்ச்சட்டைக்கு மேல் ஒரு பாதுகாப்பு சட்டை முறையை மாற்றி வரும் கல்வியாண்டு முதல் முட்டிகால் குட்டைப்பாவாடை மற்றும் வெறும் மேல் சட்டை முறையை கொண்டு வந்திருக்கிறது என பெற்றோர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது… இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் சக்தி சட்ட விழிப்புணர்வு சங்க செயலாளர் திரு டாக்டர் அயன்புரம் பாபு அவர்கள் முன்னிலையிலும்..சட்ட ஆலோசகர் சதிஷ்குமாரன் அவர்கள் தலைமையிலும் சட்ட ஆலோசகர் டாக்டர் துறை கார்மேகம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.மற்றும் பல சட்ட கல்லூரி மாணவர்கள் பொது மக்கள் முன்னிலையிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *