Tuesday , May 22 2018
Home / District-News / கோவையில் சென்னை சிட்டி கால்பந்து அணி வெற்றி பெற்றது.

கோவையில் சென்னை சிட்டி கால்பந்து அணி வெற்றி பெற்றது.

கோவையில் சென்னை சிட்டி கால்பந்து வெற்றி பெற்ற அணி வீரர் சூரைக்கு ரூ. 25,000த்திற்கான காசோலை அமைச்சர் எஸ். பி. வேலுமணி வழங்கினார்.

கோவை ஐ லீக் கால்பந்து போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த மினர்வா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஹீரோ ஐ லீக் கால்பந்தாட்ட போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்த சென்னை கால்பந்து அணி நடைபெற்ற தனது கடைசி லீக் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த மினர்வா (பஞ்சாப்) அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் ஆரம்ப முதலே சென்னை சிட்டி அணி ஆக்ரோஷமாக விளையாடியது. இதன் பிரதிபலனாக ஆட்டத்தின் 05-வது நிமிடத்திலேயே கேப்டன் சூசைராஜ் முதல் கோலை அடித்து அமர்க்களப்படுத்தினார்.

போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணியின் கேப்டன் சூசைராஜிற்கு ஆட்டநாயகனுக்கான விருதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி ஆகியோர் பரிசு மற்றும் ரூ.25,000-த்திற்கான காசோலையை வழங்கினார்.

அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் உள்ளனர்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *