Thursday , May 24 2018
Home / District-News / 14-வது நிதிக்குழுவில் 2017 – 2018ஆம் ஆண்டுக்கான கோரிக்கை விடுத்துள்ளார்

14-வது நிதிக்குழுவில் 2017 – 2018ஆம் ஆண்டுக்கான கோரிக்கை விடுத்துள்ளார்

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

14-வது நிதிக்குழுவில் 2017 – 2018ஆம் ஆண்டுக்கான 2 ஆம் கட்ட நிதியான 631. 98 கோடி ரூபாய் நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான 6,078.4 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் தாமதமாவதற்கு, திமுக தொடர்ந்த வழக்கே காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர், வார்டு, மண்டலம் வரைமுறை பணிகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பான விண்ணப்பங்களைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைத்துக் கட்சியினர் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளதாகவும், விரைவில் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *