Tuesday , May 22 2018
Home / District-News / கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு

தமிழக அரசின் சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பயன்பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள்; தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
கருவிலே திருவை தாங்கி தங்களது அடுத்த தலைமுறையை உருவாக்கித் தர இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை சுற்றமும் நட்பும் சூழவாழ்த்தி மகிழும் வளைகாப்பு திருவிழா தங்களுக்கும் நடக்க வேண்டும் என்பது அனைத்து கர்ப்பிணி பெண்களின் எதிர்பார்ப்பு ஆகும். இத்தகைய விழாவை நடத்துவதற்கேற்ற பொருளாதார வசதியற்ற ஏழை காப்பிணிப் பெண்களின் உள்ளார்ந்த விருப்பதை உணர்ந்த மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாய் அன்போடும், மனிதநேயத்தோடும் சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக 2013-ஆம் ஆண்டு முதல் நடத்திட ஆணை பிறப்பித்தார்கள்.
அதனடிப்படையில், ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக தமிழக அரசின் சார்பில் வருடாந்தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு தாயாகவும், தந்தையாகவும், இருந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு பெற்றோர்கள் செய்யக்கூடிய தாய் வீட்டு சீதனமான வளைகாப்பு விழாவினை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்கள் தேர்வு செய்யப்பட்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்  கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலை, சந்தனம், குங்குமம், வளையல் ஆகிய பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தாம்பூலம் வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு பொங்கல்சாதம், புளிசாதம், லெமன்சாதம், சாம்பார்சாதம், தயிர்சாதம், ஆகிய ஐந்து வகை சாதங்கள் வழங்கப்பட்டு  வருகிறது. மேலும், கருவுற்று இருக்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடும் வழங்கப்பட்டு வருகிறது.
Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *