Friday , May 25 2018
Home / Hospitals / கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவு துவக்கம்.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவு துவக்கம்.

 

புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், ஜிஇ ஹெல்த்கேர் அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப கருவிகள், நாட்டின் முதல்முறையாக ஜிஇ புரட்சிகர சிடி மற்றும் இன்னோவா ஐஜிஎஸ் 630 பை–பிளான் கேத் லேப் துவக்கம்
கோயம்புத்துார், இன்டியா பிப்ரவரி 10, 2018:
தமிழ்நாட்டில் என்ஏபிஎச் அங்கீாரம் பெற்ற மருத்துவமனையாக திகழும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தை கோவை சித்தாபுதுாரில் துவக்கியது.
இவ்விழாவிற்கு மத்திய அரசின் குடும்ப நலம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் திரு. அஷ்வின் குமார் சவ்பே, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். விஜயக்குமார், ஜிஇ நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஷால் வான்சூ, ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நளினிகாந்த் கொல்லகண்டா ஆகியோர் இந்த புதிய சர்வதேச தரம் வாய்ந்த வசதிகளை துவக்கி வைத்தனர்.

துவக்க விழாவில், எஸ்என்ஆர் சன்ஸ் தொண்டு அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஆர் விஜயக்குமார் பேசுகையில், ’‘கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது அறக்கட்டளை, கோயம்புத்துார் மற்றும் இதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சிறந்த சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது.

முதலாவது சிடி ஸ்கேன், முதல் எம்ஆர்ஐ, லீனியர் ஆக்சிலேட்டர், டிஜிட்டல் மம்மோகிராபி மற்றும் பெட் சிடி ஸ்கேன் போன்றவைகளை அளித்துள்ளது. துவக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடம், பல தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும் என்ற எங்களது கடமையை நிறைவேற்றியுள்ளது. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இயன்ற அளவுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,’’ என்றார்.

இப்புதிய 10 மாடி கட்டடம், ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ கருவிகள் உள்ளன. நோயாளிகளின் வசதிக்காக நாட்டிலேயே மிக துல்லியமான முடிவுகளை காட்டும் இந்த கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இங்குள்ள பல தொழில்நுட்பங்கள் கோவைக்கு முதல் முறையாக கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜிஇ நிறுவனத்தின் டிஸ்கவரி 750வாட் (3.0டி), எம்ஆர்ஐ, ஜெம் முறையிலானவை. முக்கியமாக நோயாளியின் அதிகபட்ச வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு பரிசோதனைகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்ள எம்ஆர் எலஸ்டிக்ரோகிராபி மற்றும் எம்ஆர் கண்டிஷனல் உலோகம் பதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிநவீன சிடி, இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பீட் இருதய துடிப்பு, எளிதான சுவாசத்தை அறியும் கருவி, 160 மி.மீ., தொழிலக முன்னணி சிறப்பம்சம், ஒரே சுற்றில் அனைத்து பாகங்களையும் ஸ்கேன் செய்யும் கருவி. 80 செ.மீ., அகன்ற குழாய் கொண்ட இந்த கருவி, சிறப்பான தெளிவான படத்தை அளிக்கவல்லது.

ஜிஇ இன்னோவா ஐஜிஎஸ் 630 பை பிளான் கேத் லேப்: நரம்பு குறுக்கீட்டு சிகிச்சை, ரத்த நாளங்களுக்கான சிகிச்சை போன்றவை சிக்கலான நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவுகின்றன. புதிய கண்டறியும் கருவியானது, துப்பறியும்திறன் கொண்டவை. மிக குறைந்த கதிரியக்க அளவில், உயர்தரத்திலான படத்தை அளிக்கவல்லது.

இந்த கட்டடத்தில் ஏழு அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், 6 படுக்கை வசதிகள் கொண்ட மூன்று பிரசவ அறைகள், 11 பெட் ஐசியு மற்றும் 16 படுக்கை பிஐசியு/என்ஐசியு, 95 அறைகள், 20 சொகுசு அறைகள், 82 டாக்டர்களுக்கான மருத்துவ ஆலோசனை அறைகள், அல்ட்ரா சவுண்ட்ஸ், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்டெல்த் ஸ்டேஷன், டயக்னஸ்டிக் கார்டியாலஜி, வெண்டிலேட்டர்ஸ், அனஸ்தீசியா மற்றும் வார்மர் போன்றவைகள் உள்ளன.
ஜிஇ ஹெல்த் கேர் இன்டியா மற்றும் தெற்காசிய நாடுகளின் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் நளினிகாந்த் கல்லகுண்டா பேசுகையில்,‘‘ மண் இந்த மண்டலத்தில் உள்ள மக்களுக்கு, எஸ்என்ஆர் டிரஸ்ட் மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனை உலகத்தரமன சேவையை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதை பாராட்டுகிறோம். இப்புதிய வசதியால், வரும் ஆண்டுகளில் ஜிஇ மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனையின் உறவுகள் வலுப்படும். கோயம்புத்துார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒரு மாறுபட்ட வழிமுறைகளை அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இப்பகுதியினர், அதிநவீன, உயர்தர மருத்துவ தொழில்நுட்பத்தில் சிகிச்சை பெற வாய்ப்பு பெற்றுள்ளனர்,’’ என்றார்.

ஜிஇ மைய தீர்வுகளைக் கொண்ட டிஜிட்டல் மருத்துவமனை:
ஜிஇ மையமாகக் கொண்டு ஆர்ஐஎஸ் பேக்ஸ் தீர்வுகள், மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ கருவிகளிலும் இடம் பெறுகின்றன. இது நோயாளிகளுக்கும், டாக்டர்களுக்கும் புதிய டிஜிட்டல் அனுபவத்தை தரும். மருத்துவமனையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்பு வழியாக, கதிரியக்க தகவல் அமைப்பு, ஒருங்கிணைந்த தளம் வழியாக டாக்டர்கள் எங்கிருந்தாலும் படக்காட்சிகளையும் பரிசோதனை முடிவுகளையும் அறிய முடியும். நோயாளிகள் எவ்வித கோப்புகளையும் கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அனைத்தும் ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் தகவல்கள் பகிரப்படும்.
மருத்துவ சுற்றுலாவுக்கு இதுஒரு ஊக்கம்:
புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதியானது, இந்த மண்டலத்தில் மருத்துவ சுற்றுலாவுக்கு ஊக்கம் தருவதாக அமையும். கோவை நகருக்கு அருகில் உள்ள ஆசிய நாடுகளான இலங்கை, பங்களதேஷ் மட்டுமின்றி, துாரத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளான கானா, நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருவர். பன்னோக்கு திட்டங்கள், பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள், பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகள் மற்றும் முறைகள், அதிநவீன பரிசோதனை தொழில்நுட்பங்கள், நோயாளிகள் எளிதாக மருத்துவமனையை அணுக வசதியாக மொழி பெயர்ப்பாளர்கள், சர்வதேச உணவு முறைகள் உள்ளிட்டவை கோவையை கவர புதிய வசதிகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் சிகிச்சை பெற நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை பற்றி:
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, உயர் தொழில்நுட்ப மருத்துவ வளாகம் (1000 படுக்கை வசதி) கொண்ட, உயிர் காக்கும் சேவையை கொண்டது. மருத்துவ சுற்றுலாவையும் மேம்படுத்தும் விதமாக சிறந்த டாக்டர்களைக் கொண்ட குழுவையும், அதிநவீன மருத்துவத்தையும் கொண்டது. மேலும் விபரங்களுக்குwww.snrsonstrust.org, www.sriramakrishnahospital.com என்ற இணையத்தளங்களை பார்வையிடலாம்.
ஜிஇஹெல்த்கேர் பற்றி:
ஜிஇ ஹெல்த்கேர், மருத்துவ தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி சேவை செய்து வருகிறது.

மருத்துவ துறையில் அதிகரித்து வரும் கருவிகளின் தேவைகளை பூர்த்தி செய்து, உலகில் தரமிக்க மருத்துவத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது. ஜிஇ (NYSE: GE) ,கடினமான தொழில்நுட்பங்களை சவால்களாக மேற்கொண்டு கருவிகளை உருவாக்கி வருகிறது. மருத்துவத்தில் பட தொகுப்பு, தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், நோயாளிகளை கண்காணிக்கவும், மருந்து கண்டுபிடிப்புகளை ஆராயவும், உயிரி தொழில்நுட்ப மருந்துகளை தயாரிக்கும் தொழில்நுட்பங்களையும் அளித்து வருகிறது.

செயல்திறன் மேம்பாட்டு தீர்வுகளை அளித்து மருத்துவத்துறையில் உள்ளோர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவி வருகிறது. மேலும் விபரங்களுக்கு www.gehealthcare.com என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம்.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி [email protected]

About Admin

Check Also

Kolkata stands witness to its First Heart Transplant surgery at Fortis Hospital, Anandapur

Chennai, May : In a landmark event, a team of doctors at Fortis Hospital, Anandapursuccessfully transplanted …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *