Thursday , May 24 2018

அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் கேரள மின்வாரிய அணி வெற்றி

தமிழக அணி 2-வது இடத்தை பிடித்தது.

கோவையில் நடந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி.என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 12 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இறுதி போட்டி பி.எஸ். ஜி.தொழில் நுட்பக் உள் விளையாட்டு அரங்கில் நடந்த கேரள அணி 94-71 என்ற புள்ளிக்கணக்கில் தமிழக அணியை வீழ்த்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 3-வது இடத்துக்கான போட்டியில் பஞ்சாப் – அரியானா ஆகிய அணிகள் மோதின. இதில் 56-44 என்ற புள்ளிக்கணக்கில் பஞ்சாப், அரியானா அணியை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.
பரிசளிப்பு விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் இ.ஆ.ப தலைமை தாங்கினார். தமிழக துனண சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தார். மின்சார வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் ஆல்துரை வரவேற்றார்.

இவ்விழாவிற்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்கள்
இதில் எம். எல்.ஏ.க்கள் பி.ஆர். ஜி அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், மின்வாரியம் மற்றும் பகிர்மான கழக செயலாளர் பாலாஜி, முதுநிலை விளையாட்டு அதிகாரிகள் சிவக்குமார், ஜோஸ்னா, சின்னப்பா மற்றும் சிங்கை முத்து, விமல் சோமு உள்பட பலர் கலந்து கொண்டனார்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

கோவை ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் ஸ்ரீ சிவா மருத்துவமனை சார்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. கோவை கணபதியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *