Wednesday , May 23 2018


கோவை கே.எம். சி.ஹெச் மருத்துவமனை தனது புதிய கிளையை “கே.எம். சி.ஹெச் கோவில்பாளையம் மருத்துவமனை” என்ற பெயரில் சத்தி ரோடு கோவில்பாளையத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கே.எம். சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிச்சாமி, டாக்டர் தவமணி பழனிச்சாமி மற்றும் டாக்டர் அருண் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.

நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர் ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை ஏ.சண்முகம், ஆர். கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

கே.எம். சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல பழனிச்சாமி கூறிகையில்
மருத்துவ துறையில் கடந்த
27 வருடங்களாக தனித்துவம் விளங்கும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமளன புதிய கிளையின் சிறப்பு அம்சங்கள் கே.எம்.சி.ஹெச் யில்
100 படுக்கை வசதிகள், 24 மணி நேர விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவு, மகப்பேறு, பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு முறிவு, பொது நல மருத்துவம், அறுவை சிகிச்சை, இருதய நல மருத்துவம், மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய மருத்துவ பிரிவுகள் கொண்டுள்ளது.
மேலும் ஐ.சி.யூ, எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், லேப், பார்மஸி போன்ற சிறப்பு வசதிகளும் உள்ளன.

மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களாக டாக்டர் ஐ.தேவகுஞ்சரி, டாக்டர். வி.நளினி மகப்பேறு மருத்துவர்கள், டாக்டர். கார்த்திகேயன் பொது நல மருத்துவர், டாக்டர். பிரதீப். செந்தில்குமார் குழந்தைகள் நல மருத்துவர், டாக்டர். ஜே.பாலகுமாரன் இருதய நல மருத்துவர், டாக்டர். வி.விமல்குமார் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் டாக்டர். எல்.ஜெயா சுகந்தி பொது நல மருத்துவர் ஆகியோர் திறம்பட செயலாற்ற உள்ளனர் என்று கூறினார்.

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி

கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் வாளகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட ஆரோக்கியப் உணவுக் பாதுகாப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *