Wednesday , May 23 2018
Home / News / மாசி திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் காளி திருநடன உற்சவம் தொடங்கியது.

மாசி திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் காளி திருநடன உற்சவம் தொடங்கியது.

கும்பகோணம் சடச்சாயி மடத்துத்தெருவில் எழுந்தருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீநவக்கிரஹ காயத்ரி காளியம்மன் திருகோவிலில் 10 ம் ஆண்டு மாசி திருவிழாவை முன்னிட்டு காளி திருநடன உற்சவம் கடந்த 17 ம் தேதி வெள்ளிக்கிழமை திருகோவிலில் இருந்து தொடங்கியது.

ஸ்ரீ நவகிரஹ காயத்ரி காளியம்மன் நடன வீதி உலா மங்கல இசையுடன் கும்பகோணம் பகுதியில் உள்ள மாகமககுளம் நான்கு வீதிகள்,தஞ்சை சாலை காந்தியடிகள் சாலை என பல தெருக்களுக்கு சென்று நிறைவாக 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீ நவகிரஹ காயத்ரி காளியம்மன்
திருகோவிலுக்கு வந்தடைந்தது கடந்த மூன்று நாட்களாக நடைப்பெற்று வந்த இவ்விழாவில் பெண் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு காளி அம்மனின் திருநடன காட்சி கண்டு வீதி உலாவின் போது அருள் வாக்கு கேட்டு சென்றார்கள் இவ்விழா ஏற்பாட்டினை திருகோவில் .பூசாரி சசி மற்றும் விழா குழுவினர் தெருவாசிகள் செய்திருந்தார்கள்

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …