Wednesday , May 23 2018
Home / Tamilnadu Police / மடிப்பாக்கம் பகுதியில் பணம் தர மறுத்த நபரை கத்தியால் தாக்கிய நபர் கைது.

மடிப்பாக்கம் பகுதியில் பணம் தர மறுத்த நபரை கத்தியால் தாக்கிய நபர் கைது.

சென்னை, நங்கநல்லூர், கம்பர் தெரு, எண்.10 என்ற முகவரியில் தனசேகரன், வ/30, த/பெ.பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (05.03.2018) மதியம் சுமார் 12.00 மணியளவில் மூவரசம் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச்சேர்ந்த ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் மேற்படி தனசேகரிடம் பணம் கேட்டுள்ளார். தனசேகரன் பணம் இல்லை எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனசேகரனை தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த தனசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தனசேகரன் எஸ்-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எஸ்-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ரமேஷ் (எ) அல்லி ரமேஷ், 27, த/பெ.முனுசாமி, எண்.1/10, பஜனை கோவில் தெரு, மூவரசம் பேட்டை என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் மீது அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட ரமேஷ் (எ) அல்லி ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *