Tuesday , May 22 2018
Home / Tamilnadu Police / புது வண்ணாரப்பேட்டை பகுதியில் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய மூவர் கைது.

புது வண்ணாரப்பேட்டை பகுதியில் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய மூவர் கைது.

நேற்று (16.12.2017) மதியம் சுமார் 1.35 மணியளவில் ழ-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி நகர் மார்க்கெட் அருகில் நிறுத்தி வைத்திருந்த  தமிழக அமைச்சர் திரு.உதயகுமார் அவர்களின் கார் கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக ழ-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ழ-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி கார் கண்ணாடியை உடைத்த வழக்கில் சம்பந்தப்பட்ட டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் 1.மதிவாணன், வ/22, த/பெ.சாமிநாதன், எண்.23/28, ஜீவா நகர் மெயின் தெரு, அம்பேத்கார் நகர், புதுவண்ணாரப்பேட்டை 2.மோகன், வ/22, த/பெ.சுந்தர்ராஜ், ஜீவா நகர் மெயின் தெரு, அம்பேத்கார் நகர், புதுவண்ணாரப்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் கடந்த 15.12.2017 அன்று இரவு 8.00 மணியளவில் அ.தி.மு.க பேச்சாளர் திருமதி.நிர்மலா பெரியசாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் முடித்து புது வண்ணாரப்பேட்டை, வாசர் வரதப்ப மேஸ்திரி தெரு அருகே தனது காரில் வந்துகொண்டிருந்த போது அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் மேற்படி திருமதி.நிர்மலா பெரியசாமி அவர்களின் காரின் முன்பக்க கண்ணாடி மீது கல்லெறிந்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக ழ-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ழ-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய டி.டி.வி தினகரன் ஆதரவாளர் முத்துபாண்டி, வ/35, த/பெ.குப்புசாமி, எண்.40, பூண்டி தங்கம்மாள் தெரு, புதுவண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்தனர். மற்ற குற்வாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *