Thursday , May 24 2018
Home / Tamilnadu Police / பிராட்வே பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது. 80 மதுபாட்டில்கள் பறிமுதல்.

பிராட்வே பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர் கைது. 80 மதுபாட்டில்கள் பறிமுதல்.

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் அவர்களது காவல் நிலைய எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, என்-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (20.9.2017) காலை 10.00 மணியளவில் பிராட்வே பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், பிரகாசம் சாலை மற்றும் மண்ணடி தெரு சந்திப்பு அருகே ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒருவர் ரிக்ஷா வண்டியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பாண்டியன், வ/38, த/பெ.லட்சுமணன், எண்.40, எம்.கே. கார்டன் தெரு, மாஸ்கான் சாவடி, பிராட்வே, சென்னை- 1 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவுள்ள 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பாண்டியன் அப்பகுதியில் ரிக்ஷா வண்டி ஓட்டி வருவது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பாண்டியன், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *