Thursday , May 24 2018
Home / News / பகத்சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவுதினத்தையொட்டி வாலிபர் சங்கம்சார்பில் வேலையின்மைக்கு எதிராக வெண்சீருடை பேரணி

பகத்சிங் ,ராஜகுரு, சுகதேவ் நினைவுதினத்தையொட்டி வாலிபர் சங்கம்சார்பில் வேலையின்மைக்கு எதிராக வெண்சீருடை பேரணி

விடுதலை போராட்டத்தில் உயிநீர்த்த பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுதினத்தையெட்டி வேலையின்மைக்கு எதிராக வெண்சீருடை பேரணி கருத்தரங்கம் தருமபுரியில் நடைபெற்றது.

ஆண்டுக்கு 2 இளைஞர்களுக்கு வேலைதருவதாக சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக மோடியின் அரசு இதுவரை 1.5 இலட்சம் பேருக்கு மட்டுமே வேலை உருவாக்கப்பட்டது. பணமதிப்பு நடவடிக்கையால் மேலும் வேலையின்மை அதிகரித்துள்ளது. அரசு வேலைவாப்பை உருவாக்க மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூறுநாள் வேலைதிட்டத்தையும் ஒழிக்கும் முயற்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. தமிழகத்தில் மட்டும் 96 இலட்சம் இளைஞர்கள் வேலையின்றிஉள்ளனர். எனவே இளைஞர்களுக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் சி.வேலாயுதம் தலைமைவகித்தார். முன்னாள் மாவட்டசெயலாளர் ஏ.குமார் மாவட்ட செயலாளர் ஆர்.எழில்அரசு மாவட்டதுனைசெயலாளர் சிவன் மாவட்ட துனைசெயலாளர் லோகநாதன் மாவட்ட நிர்வாகிகள் காரல்மார்க்ஸ் ரமேஷ் மணிகண்டன் ஆகியோர் பேசினார். முன்னதாக பெரியார்மன்றம் முன்பு துவங்கிய பேரணி கடைவீதி வழியாக தொலைதொலைபேசி நிலையத்தை வந்தடைந்தது.

About Ragavendhar

Check Also

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …