Wednesday , May 23 2018
Home / Tamilnadu Police / தேனாம்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிய குற்றவாளி கைது.

தேனாம்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்களை திருடிய குற்றவாளி கைது.

சென்னை, தேனாம்பேட்டை, சீத்தாம்மாள் 1வது மெயின் ரோடு, எண்.3/2, என்ற முகவரியில் வசிக்கும் விஷால், வ/29, த/பெ.பக்கிரிசாமி என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விஷால் கடந்த 18.10.2017 அன்று இரவு பணிமுடித்து வீட்டிற்கு வரும் வழியில் இரவு சுமார் 11.00 மணியளவில் தேனாம்பேட்டை சிக்னல், கே.பி.தாசன் சாலையிலுள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விஷாலின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து விஷால், நு-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேற்படி காவல் குழுவினர் நேற்று (15.12.2017) தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பல்சர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும், அவரிடம் வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவரது பெயர் அஜித் (எ) அஜித்குமார், வ/21, த/பெ.ராஜேந்திரன், எண்.100, கலைஞர் தெரு, ரெட்டிக்குப்பம், கானத்தூர், சென்னை என்பதும், மேற்படி புகார்தாரர் விஷாலின் செல்போனை பறித்துச் சென்ற குற்றவாளி என்பதும், மேலும், அஜித்குமார் தேனாம்பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.

அதன்பேரில், குற்றவாளி அஜித்குமார் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து மேற்படி செல்போன் மற்றும் பல்சர், யமஹா, ஸ்கூட்டி, ஆக்டிவா உட்பட 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட குற்றவாளி அஜித்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *