Wednesday , May 23 2018
Home / State-News / தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப அவர்கள் உத்தரவின்படி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் டெங்கு ஒழிப்பு பணிகளை கவனிக்க 30 தற்காலிக தினக்கூலி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்கள் உள்ளதா? குடிநீர்த் தொட்டிகள் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா? வீடுகளில் தேவையற்ற டயர்கள், சிரட்டை, தேங்காய் மட்டைகள், குப்பைகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களோடு தூய்மை பாரதம் இயக்கத் திட்டப் பணியாளர்களும் அந்தந்த கிராம ஊராட்சிகளின் பணியாளர்களும் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொசு புகை மருந்தும் அனைத்து பகுதிகளிலும் அடிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் பொது சுகாதாரத்துறை அலுவலர்களும் இணைந்து மேற்பார்வை செய்து வருகின்றனர்.

மேலும், கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசுப்புழுக்கள் உள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டு கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கிராம ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் குளோhpனேசன் செய்யப்பட்டு வழங்கப்படுவதுடன் தனியார் குடிநீர் விற்பனை நிலையங்களும் குளோhpனேசன் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, குளோhpனேசன் இல்லாத குடிநீர் வழங்கினால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாப்பிள்ளையு+ரணி ஊராட்சிப் பகுதிகளில் வீடுகளில் உள்ள உறை கிணறுகளில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப., துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் கீதாராணி மற்றும் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திரு ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல் ஆகியோர் உத்தரவின்படி புதுக்கோட்டை மற்றும் மாப்பிள்ளையு+ரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து கம்பு+சியா மற்றும் கப்பீஸ் வகை மீன் குஞ்சிகள் மாதா நகர் பகுதிகளில் உள்ள 250 வீடுகளின் உறை கிணறுகளில் விடப்பட்டன. இவ்வாறு மீன்குஞ்சுகள் கிணறுகளில் விடப்படுவதால், கிணறுகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கட்டுப்படுத்தப்படும்.

மாப்பிள்ளையு+ரணி ஊராட்சிக்குட்பட்ட கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடும் பணியானது தொகுதி அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவாpன் சத்துணவுத் திட்ட நேர்முக உதவியாளருமான திருமதி ஜோதி லைலாம்பிகா மேற்பார்வையில் நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திரு கோ.இசக்கியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) திரு உ.ப.சிவராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு ஆர்.இராமசாமி ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் திரு சண்முக சுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் திரு வில்சன், திருமதி சித்ரா, ஊராட்சி செயலர் திரு ரமேஷ் ஆகியோர் மேற்படி பணிகள் நடைபெறும் போது உடனிருந்தனர்.

About Admin

Check Also

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில்.

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில் பட்டி வேலாயுதம் எம்.எஸ்.பி திருமண மண்டபத்தில் நடந்தது. இம்மாநட்டில் 10 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *