Monday , May 21 2018
Home / District-News / தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் விதை பந்து விநாயகர் வழங்கப்பட்டது

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் விதை பந்து விநாயகர் வழங்கப்பட்டது


சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் விழித்தெழ அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் லட்சகணக்கான விதைபந்துகளை வீசி வருகின்றனர்.விநாயகர் சதூர்தியையொட்டி மரம் வளர்பதை ஊக்கப்படுத்தும் விதமாக விநாயகர் சிலையில் மர விதைகளும் உரங்களையும் வைத்து செய்யப்பட்ட சிலைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்ப்பட்டன.

அந்தவகையில் சென்னை கோட்டூர்புரத்தல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் விதத்திலும் விநாயகர் மண்சிலையில் வேங்கை, புளியமரம் உள்ளிட்ட மரங்களின் விதைகள் சிலையின் உள்ளேவைக்கப்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன.தமிழகம் முழுவதும் இதுபோல் ஆயிரகணக்கான விதைகளுடனான விநாயகரின் சிலைகள் கொடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பூஜைக்குபின்னர் தூக்கி வீசப்படும் ஒவ்வொரு விநாயகர் சிலையில் இருந்தும் பல நூறு மரங்கள் வளரும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

விழித்தெழு அறக்கட்டளை சார்பில் விதை பந்து விநாயகர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி ஒருங்கிணைப்பாளர் காமேஷ் மற்றும் ராஜசேகர் ,நெ.து சுந்தரவடிவேல் அறக்கட்டளை செயலாளர் லெ.பாலாவுக்கு வழங்கப்பட்டது.

About Admin

Check Also

ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *