Thursday , May 24 2018
Home / Tamilnadu Police / தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை ஆட்டோவில் எடுத்து வந்த இரண்டு நபர்கள் கைது.

தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை ஆட்டோவில் எடுத்து வந்த இரண்டு நபர்கள் கைது.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக ஜி-2 பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.09.2017) மதியம் சூளை, ரவுண்டானாவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை சோதனை செய்தபோது ஆட்டோவில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் பேரில் இருவரையும் கைது செய்து ஜி-2 பெரியமேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் 1.சோகித்குமார் மிஸ்ரா, வ/27, த/பெ.தினேஷ்மிஸ்ரா, எண்.14/10, வாசர்மேன் அலி சந்து, நம்மாழ்வார் தெரு, சௌகார்பேட்டை                 2.தண்டபாணி, வ/40, (ஆட்டோ ஓட்டுநர்), த/பெ.சுப்பிரமணி, எண்.91, டாக்டர் சந்தோஷ் நகர், எழும்பூர் என்பது தெரியவந்தது. மேலும் சோகித்குமார் மிஸ்ரா அளித்த தகவலின் பேரில்  சௌகார்பேட்டையில் அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனைசெய்து அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 49,500 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் போலீசாரின் விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்  வினோத் என்பருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சோகித்குமார்,  மேற்படி வினோத்திடம் வேலை செய்து வந்துள்ளார். தலைமறைவாகியுள்ள வினோத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.     கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *