Thursday , May 24 2018
Home / Business / சிங்கார சென்னையில் ஊபர்ஈட்ஸ் (UberEATS) தொடங்கப்படுகிறது

சிங்கார சென்னையில் ஊபர்ஈட்ஸ் (UberEATS) தொடங்கப்படுகிறது

சென்னை, அக்டோபர் , 2017: மக்கள் விரும்பும் உணவை அவர்களுடன் இணைக்க, ஊபர்ஈட்ஸ் என்ற தேவைக்கேற்ற உணவு விநியோக பயன்பாடு சென்னையில் தனது சேவையைத் தொடங்குகிறது. நகரத்தைச் சுற்றியுள்ள 200க்கும் அதிகமான உணவகங்களுடன் கைகோர்ப்பது மூலம், இப்போது A2B சைவ உணவகம் (ஊபர்ஈட்ஸில் பிரத்தியேகமானது), ஆசிஃப் பிரியாணி, க்ரீம் ஸ்டோன் மற்றும் கிரீம்ஸ் சாலையிலுள்ள பழக்கடை மற்றும் சிலவற்றிலிருந்து சென்னை மக்கள் தங்கள் விருப்பமான உணவை ஆர்டர் செய்யலாம்.

ஊபர்ஈட்ஸ் இந்தியாவின் தலைவரான பாவிக் ரத்தோட் இதுபற்றி, “இந்தியாவில் ஊபர்ஈட்ஸ் செயல்பாடுகளை ஆரம்பித்த ஐந்து மாதங்களுக்குள், ஊபர்ஈட்ஸை சென்னையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். விரைவான மற்றும் நம்பகமான உணவு விநியோகத்திற்கு, ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவது மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அற்புதமான உணவக கூட்டாளர்கள், எங்கள் தொழில்நுட்பம் மற்றும் ஊபர் விநியோக நெட்வொர்க் ஆகியவற்றின் சரியான இணைப்பின் மூலம் எல்லோரும் சிறந்த உணவைக் கண்டுபிடிக்க உதவுவதே எங்கள் நோக்கமாகும்.” என்று கூறினார்.

 

சென்னை நகரத்தின் சுவாரஸ்யமான உணவு ட்ரெண்ட்டுகள் பின்வருமாறு:

● தென்னிந்திய உணவுகள் சென்னை மக்களால் மிகவும் விரும்பப்படும் உணவாக இருக்கிறது, இதில் தோசை வகைகள் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் உணவாகும்.
● பிற நகரங்களை விட சென்னை மக்கள் காலை உணவை விரும்பு உண்கிறார்கள், இங்கு எட்டு மணிக்கு முன்பே பெரும்பாலான உணவகங்கள் திறந்திருக்கும்
● சென்னையில் பிரியாணி வேகமாக வளர்ந்து வரும் உணவு வகையாகும், கடந்த 2 ஆண்டுகளில் இதற்காக அதிக எண்ணிக்கையிலான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன.
● ஹோம் பேக்கிங் என்பது ஒரு கலாச்சாரமாக சென்னை முழுவதும் வளர்ந்து வருகிறது, 50க்கும் மேற்பட்ட பேக்கரி விற்பனையாளர்கள் வீடுகள் அல்லது கிளவுட் கிச்சன்கள் மூலம் இயங்குகின்றனர்.

ஊபர்ஈட்ஸ் இந்தப் பண்டிகை நாட்களில் ஃபெஸ்டிவ்ஈட்ஸைத் தொடங்குவது மூலம் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. பண்டிகைகள் என்பது மகிழ்ச்சி, ஒன்றுகூடுதல் மற்றும் உணவுடன் கொண்டாட்டமும் தொடங்குகிறது. அக். 14 முதல், நுகர்வோர் ஊபர்ஈட்ஸ் பயன்பாட்டில் எங்கள் உணவக பார்டனர்களுடன் பிரத்தியேக சலுகைகள் பெற்று அவர்களின் வீட்டிலேயே அவற்றைப் பெறுவார்கள். இவை அனைத்தும் எங்கள் அறிமுக வெளியீடு விநியோக கட்டணமாக ஒரு ரூபாயில் பெறுவீர்கள்.

2014ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய விநியோக சோதனையாக ஊபர்ஈட்ஸ் தொடங்கப்பட்டது மற்றும் டொரொண்டோவில் டிசம்பர் 2015-இல் ஒரு தனி பயன்பாடாக தொடங்கப்பட்டது. கடந்த __ மாதங்களில், இது நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்துள்ளது, இப்போது உலகம் முழுவதும் __ நாடுகளிலும் __ நகரங்களில் ஒரு தனி பயன்பாடாக கிடைக்கிறது. இந்தியாவில், முதல் முறையாக மும்பையில் 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் ஊபர்ஈட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 மாதங்களுக்குள் இந்த சேவை டெல்லி, குர்கான், பெங்களூரு என விரிவுபடுத்தப்படவுள்ளது, மேலும் நாளை சென்னையிலும் தொடங்கப்படுகிறது.

ஊபர்ஈட்ஸ் பயன்பாடு என்பது மக்கள் தங்கள் உணவு தேவைக்குப் பயன்படுத்தும் தனித்த ஒரு பயன்பாடாகும். இந்தப் பயன்பாடு ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலம் முடிந்தவரை உணவு விநியோகத்தைத் தடையின்றி வழங்க உருவாக்கப்பட்டிருக்கிறது.

உபர்ஈட்ஸை பயன்படுத்தும் எளிய முறை:
1. ஊபர்ஈட்ஸ் (UberEATS) செயலியை பதிவிறக்கிக் கொள்ளவும்.
2. உணவு விநியோகிக்க வேண்டிய இடம் – உணவை விநியோகிக்க விரும்பும் உங்கள் முகவரியை உள்ளிடவும்
3. சரியான உணவை தேடுதல் – உங்கள் சுவைக்கேற்ற சரியான உணவைத் தேட, உள்ளூர் உணவகங்களுக்கு உலாவவும் அல்லது உணவு வகைப்படி தேடவும், பின் விலை, உணவு தேவை மற்றும் விரைவான விநியோகம் ஆகியவற்றின் படி வரிசைப்படுத்தவும்.
4. ஆர்டர் செய்தல் – உடனே வேண்டுமா அல்லது உங்கள் வசதிகேற்ப எப்போது உணவு வர வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு உங்கள் உணவைத் தேர்ந்தெடுக்கவும்
5. PayTM மூலம் பணம் செலுத்துதல் – எங்கள் கூட்டாளியான PayTM மூலம் உங்கள் ஆர்டர்களுக்கு எளிதாக பணம் செலுத்த முடியும்
6. உங்கள் உணவு விநியோகத்தைக் கண்காணித்தல் – உங்கள் ஆர்டர் தயாரானது பற்றிய தகவலையும், அது உங்கள் இடத்தை அடையக்கூடிய நேரத்தையும் நீங்கள் கண்காணிக்கலாம்.

 

 

About Admin

Check Also

BARBEQUE NATION PRESENTS ‘Magic of Ramadan’

BARBEQUE NATION Presents  ‘Magic of Ramadan’– Savor the flavors of Muslim as Barbeque Nation follow …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *