Tuesday , May 22 2018
Home / Tamilnadu Police / சாஸ்திரி நகர் பகுதியில் செல்போன் பறித்த சிறுவன் கைது. செல்போன் பறிமுதல்.

சாஸ்திரி நகர் பகுதியில் செல்போன் பறித்த சிறுவன் கைது. செல்போன் பறிமுதல்.

சென்னை, நீலாங்கரை, ஈ.சி.ஆர் பணியாளர் எஸ்டேட், முதல் குறுக்கு தெரு, எண்.13 என்ற முகவரியில் சுதன், வ/30, த/பெ.சதிஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று (04.11.2017) இரவு எல்.பி ரோடு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த போது அங்கு ஏற்கனவே நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் மேற்படி சுதனிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இது தொடர்பாக சுதன் ஜெ-5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.  ஜெ-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜன், வ/17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வடபழனி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ராஜன் மீது வடபழனி காவல் நிலையத்தில் செல்போன்பறிப்பு வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவன் ராஜன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *