Wednesday , May 23 2018
Home / State-News / “கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்

கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம்  கோலாகலமாக துவங்குகிறது.
 மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக “டபுள் டக்கர்” பேருந்து, கோவை விழாவின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான துவக்க விழா வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இதில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கலந்து டபுள் டக்கர் பேருந்தை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த பேருந்தில் இன்று துவங்கி வரும் 12-ம் தேதி வரை ஜாலியாக கோவையின் முக்கிய பகுதிகளை சுற்றிப் பார்க்கலாம். மேலும், இலவசமாக முன் பதிவின் அடிப்படையில் டோக்கன் பெற்று ஒரு மணி நேரம் இந்த பேருந்தில் பயணம் செய்யலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் ‘யங் இன்டியன்ஸ்’ அமைப்பின் தலைவர் பிரசன்னா கிருஷ்ணன் பேசுகையில், ‘கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பதிப்பில் சென்ற ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் கோவை மக்கள் பங்கேற்பார்கள். இரண்டடுக்கு பேருந்தில் பயணம் செய்து கோவையின் முக்கியமான பகுதிகளை பொதுமக்கள் இலவசமாகச் சுற்றிப்பார்த்து மகிழலாம்’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி கமிஷனர், கே. விஜய கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் பெரியய்யா வெளியிட்டு பஸ் பயணத்தை தொடங்கி வைத்தனர்.  அருகில்  இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் வனிதாமோகன், கிருஷ்ணா கல்லூரி நிர்வாக அறங்காவலர் மலர்விழி மற்றும் பலர்  உள்ளனர்.

About Admin

Check Also

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில்.

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில் பட்டி வேலாயுதம் எம்.எஸ்.பி திருமண மண்டபத்தில் நடந்தது. இம்மாநட்டில் 10 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *