Sunday , May 27 2018
Home / Tamilnadu Police / கே.கே.நகரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது.

கே.கே.நகரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்து கொலை செய்த நபர் கைது.

சென்னை, கே.கே.நகர், பகுதியில் உள்ள பிளாட்பார்மில் ஜெயகுமார் (எ) குமார், வ/45, த/பெ.குள்ளகுமார் என்பவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் கே.கே.நகர் பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தார். ஜெயகுமார் (எ) குமார் கடந்த 05.02.2018 அன்று இரவு சுமார் 11.40 மணியளவில் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள, ஜெ.டி,டிரினிட்டி அப்பார்ட்மென்ட் முன்பு உள்ள பிளாட்பாரத்தில் வழக்கமாக படுத்து உறங்கும் இடத்திற்கு சென்ற போது அங்கு ஏற்கனவே குடிபோதையில் படுத்திருந்த நண்பர் பரமசிவத்திடம், மேற்படி ஜெயகுமார் (எ) குமார் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பரமசிவம் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஜெயகுமார் (எ) குமார்க்கும் அவரது நண்பர் பரமசிவத்திற்கு இடையே நடந்த வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் பரமசிவம் அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜெயகுமார் (எ) குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்த ஆர்-7 கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆர்.7 கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பரமசிவம், வ/51, த/பெ.ராஜ்பிள்ளை, எம்.ஜி.ஆர் நகர் மார்கெட், பிளாட்பார்ம் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பரமசிவம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *