Thursday , May 24 2018
Home / Tamilnadu Police / கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

கோயம்பேடு பகுதியில் கார்களின் கண்ணாடிகளை உடைத்த 2 பேர் கைது.

சென்னை, கோயம்பேடு, சேமாத்தம்மன் கோயில் தெரு, 1வது செக்டாரில் கதவு எண்.52 என்ற முகவரியில் திரு.பிலால், வ/38, த/பெ.முஸ்தபா என்பவரும், கதவு எண்.168 என்ற முகவரியில் திரு.அரசன், வ/30, த/பெ.துரைசாமி என்பவரும் வசித்து வருகின்றனர். பிலால் மற்றும் அரசன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான கார்களை இவர்களது வீட்டு தெருவில் உள்ள பாய்ஸ் கிளப் அருகில் 26.11.2017 அன்று இரவு நிறுத்தி வைத்திருந்தனர்.

பின்னர் (27.11.2017) காலை 10.00 மணியளவில் பிலால் மற்றும் அரசன் ஆகியோரது கார் கண்ணாடிகளை 2 வாலிபர்கள் கல்லால் அடித்து உடைத்துவிட்டனர். பிலால் மற்றும் அரசன் ஆகியோர் இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கே-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி 2 கார்களின் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகள் ஜெயகுமார், வ/21, த/பெ.முருகன், எண்.13, பார்த்தசாரதி தெரு, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை-93 மற்றும் கண்ணன், வ/20, த/பெ.முருகன், எண்.32/38, மணவாளன் சாலை, குலசேகரபுரம், சின்மயாநகர், சென்னை ஆகிய 2 பேரை  (27.11.2017) கைது செய்தனர். விசாரணையில் எதிரிகள் 2 பேரும் குடிபோதையில் கார் கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எதிரிகள் ஜெயகுமார் மற்றும் கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *