Thursday , May 24 2018
Home / Tamilnadu Police / குன்றத்தூர் பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய வாலிபர் கைது.

குன்றத்தூர் பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய வாலிபர் கைது.

சென்னை, குன்றத்தூர், மரியா நகர், எண்.22 என்ற முகவரியில் முனுசாமி, வ/42, த/பெ.அண்ணாமலை, என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 03.02.2018 அன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 65 ஆயிரம் பணத்தை மர்ம நபர் யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து முனுசாமி டி-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடி வந்த நிலையில், குன்றத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (08.2.2018) சக்தி நகர் சந்திப்பு அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும் விசாரணையில் இவர் மேற்படி முனுசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன்பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிப்பட்ட நபர் வில்லியம்ஸ், வ/25, த/பெ.ஆண்ட்ரூஸ், பழைய நல்லூர், பஜனை கேயில் தெரு, சோமங்கலம் தெரியவந்தது. அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட வில்லியம்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *