Thursday , May 24 2018
Home / Tamilnadu Police / ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த சிலர் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காமல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது எனவும், உடனே போட்டியை நிறுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது காலில் அணிந்திருந்த காலணிகளை கழற்றி மைதானத்திற்குள் வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி காலணிகளை மைதானத்திற்குள் வீசிய 11 நபர்களை கைது செய்து டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் 1.மகேந்திரன், வ/41, த/பெ.ராஜன், எண்.852, 36 வது தெரு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கொரட்டூர் 2.சுகுமாறன், வ/38, த/பெ.வெங்கடேசன், எண்.22/38, மேட்டு தெரு, கொரட்டூர் 3.மார்டின், வ/38, த/பெ.ஜான்பால்ராஜ், எண்.1, சி மகாவீர் தெரு, செந்தில் நகர், திருமுல்லைவாயில் 4.ஆல்பர்ட் ராஜ் (எ) ரமேஷ், வ/40, த/பெ.பொன்னையா, எண்.2, திருவள்ளுவர்தெரு, காந்தி நகர், ஆவடி 5.ஏகாம்பரம், வ/35, த/பெ.கண்ணன், எண்.66, திருவள்ளுவர் நகர், நாகம்மை நகர், ஆவடி 6.சரவணபிரகாஷ், வ/34, த/பெ.நித்யானந்தம், எண்.103, மக்கீஸ் கார்டன், ஆயிரம் விளக்கு 7. அய்யனார், வ/33, த/பெ.ராஜவேல், எண்.11, குருசாமி நகர், புளியந்தோப்பு 8.பிரபாகரன், வ/29, த/பெ.காமராஜ், எண்.72, சுஜரப்பன் தெரு, பாரிமுனை 9.ராஜ்குமார், வ/30,த/பெ.கருப்பசாமி, எண்.845, டாக்டர் அம்பேத்கர் நகர், வேளச்சேரி 10.பொன்வேல், வ/29, த/பெ.ரங்கநாதன், எண்.26, விநாயகர் கோயில் தெரு, மறைமலை நகர், திருவள்ளூர் மாவட்டம் 11.வைகைவேந்தன், வ/39, த/பெ.அந்தோணிசாமி, எண்.14, சி-பிளாக், திருமலை காம்ளக்ஸ், வில்லிவாக்கம் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 11 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

வில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது.

வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் வெங்கடேசன் என்பவர்  நேற்று (04.04.2018) காலை 9.00 மணியளவில் வில்லிவாக்கம், எம்.டி.எச் சாலை, பாரதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *