Thursday , May 24 2018
Home / Tamilnadu Police / அயனாவரம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் கைது.

அயனாவரம் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த நபர் கைது.

சென்னை, அயனாவரம், அப்பாதுரை முதல் தெரு, எண்.42/16 என்ற முகவரியில் மணி, வ/29, த/பெ.பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த (28.01.2018) இரவு சுமார் 21.30 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச்சேர்ந்த பிரசாந்த் (எ) பாபி என்பவர் மேற்படி மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.500/- பறித்துச் சென்றனர். இது தொடர்பாக மணி மு-2 அயனாவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

மு-2 அயனாவரம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட பிரசாந்த் (எ) பாபி, வ/23, த/பெ.பாலமூர்த்தி வசந்தா கார்டன் முதல் தெரு, அயனாவரம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணம் ரூ.500/- பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிரசாந்த் (எ) பாபி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *