Wednesday , May 23 2018
Home / Tamilnadu Police / அயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.

அயனாவரம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த வாலிபர் கைது.

சென்னை, நம்மாழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் திருமதி.ரஞ்சிதா, வ/39 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் மகள் ராதா, வ/5 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவர் மேற்படி சிறுமி ராதாவை தனியாக அழைத்து சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமி ராதா அழுதுகொண்டே வந்து தனது தாய் ரஞ்சிதாவிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் ரஞ்சிதா அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஞடீஊளுடீ (ஞசடிவநஉவiடிn டீக ஊhடைனசநn கசடிஅ ளுநஒரயட டீககநnஉநள ஹஉவ- 2012) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்ததில், வெங்கடேஷ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையென தெரியவந்தது. அதன்பேரில் வெங்கடேஷ், வ/29, த/பெ.கண்ணன், எண்.69/25, பாண்டுரங்கன் கோவில் தெரு, நம்மாழ்வார்பேட்டை என்பவரை நேற்று (10.04.2018) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

About Admin

Check Also

வில்லிவாக்கம் பகுதியில் ரோந்து காவலரை பணி செய்யவிடாமல் தடுத்த மூன்று நபர்கள் கைது.

வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் வெங்கடேசன் என்பவர்  நேற்று (04.04.2018) காலை 9.00 மணியளவில் வில்லிவாக்கம், எம்.டி.எச் சாலை, பாரதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *