Monday , May 21 2018
Home / Tamilnadu Police / அமைந்தகரை பகுதியில் கல்லூரி நண்பரின் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் கைது.

அமைந்தகரை பகுதியில் கல்லூரி நண்பரின் இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் கைது.

சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி 4 வது தெரு, எண்.15/3, என்ற முகவரியில் வசித்து வரும் சாய்விஷால், வ/19, த/பெ.ராஜேஷ்குமார் என்பவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். சாய்விஷால் கடந்த 15.1.2018 அன்று இரவு தனது புல்லட் இருசக்கர வாகனத்தை (பதிவு எண்.கூசூ 13 கு 1122) தனது வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் மறுநாள்வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சாய்விஷால் கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கே-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 1.பிரவீன், வ/19, த/பெ. லாரன்ஸ் தியாகராஜன், எண்.625, ராணி அம்மையார் தெரு, பெரியார் நகர், வியாசர்பாடி 2.மோகன்ராஜ், வ/20, த/பெ.அரிபாபு, எண்.39/97, வடிவேல் முதல் தெரு, பெரம்பூர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரவீன் மேற்படி மனுதாரர் சாய்விஷாலின் நண்பர் என்பதும், இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருவதும் தெரியவருகிறது. குற்றவாளிகளிடமிருந்து புல்லட் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

About Admin

Check Also

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் காலணி வீசிய 11 நபர்கள்கைது.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *